Dr. S. Jayabarathan, B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada |
1. மீன்பிடித் தொழிலால் கூடங்குளம் பகுதியில் இருந்து ஆண்டொன்றிற்கு அரசுக்கு 2000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதை எல்லம் அணுவுலை அமைந்தால் எந்தா நாட்டிற்கும் நம்மால் மீன் ஏற்றுமதி செய்ய இயலாது. இந்த இழப்பு உங்கள் கண்ணிற்கு தெரியாதது ஏனோ? கல்பாக்கத்தில் பணி புரியும் பொறியியல் வல்லுனர்கள் அங்கு கிடைக்கும் மீன்களை வாங்குவதில்லை என்பது உஙளுக்குத் தெரியும் என எண்ணுகிறேன்.
ஜப்பான் தேசத்தில் இயங்கும் 54 அணுமின் உலைகள் கடற்கரையில்தான் அமைந்துள்ளன. கனடாவில் 20 அணுமின் உலைகள் சுவைநீர் ஏரிகளில் உள்ளன. உலகில் பல நாடுகளில் அணு உலைகள் நதிக் கரையில் கட்டப் பட்டுள்ளன. அங்கே வாழ்வோர் மீன் பிடிக்கிறார், விற்கிறார், தின்கிறார்.
2. புவி வெப்பத்திலிருந்து(Geothermal) மின்னாலைகள் அமைப்பதில் ஆராய்ச்சி செய்வதற்கு கூட அரசு சற்றும் சிந்தியாதது ஏனோ? இதில் 35GW முதல் 2000GW வரை கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
இதெல்லாம் தியரி.
Geothermal Energy Pros and Cons
Pros and Cons of Geothermal Energy
Pros & Cons of Geothermal Energy
Geothermal Power Technology: Pros and Cons
Although there are many positive points of geothermal energy, you can't ignore its negatives when you compare geothermal energy pros and cons. One major problem with geothermal energy is its availability. This form of energy is only available in certain regions on planet Earth. Although it is considered to be a relatively cheap source of energy, the initial cost of setting up a geothermal plant is enormous. Due to this high initial expenditure, not many countries are keen in exploiting this source of energy. The process involved in tapping energy from the ground is quite complex as well. More importantly, there is no guarantee that the site being drilled will facilitate access to steam or hot water forever, or that the site in which one has invested will continue to provide steam or water in desired amounts.
3. அணுக்கரு உலையிலிருந்து குறைந்த அளவு கதிர்வீச்சு எக்காலத்திலும் வந்து கொண்டிருக்கும் என்பதை அறிஞர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். இது உயிரிகளில் திடீர் மாற்றத்தை (Mutation) ஏற்படுத்தும் என்பது உஙளுக்கு தெரியாதது ஏனோ?
தணிவு நிலைக் கதிரடிப்புகள் உயிர் மூலவித் துண்டிப்பு செய்யா. தமிழ்நாடு கும்ரிமுனை & கேரளாக் கடற்கரையில் ஏராளமாக தோரியம் ஆல்பாக் கதிர்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய்ப் பின்புலத்தில் கொண்டுள்ளது. அங்கு வாழும் மனிதர் திடகாத்திரமாய் இருக்கிறார்.
கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2
4. இந்த கதிர்வீச்சு அதை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக கல்பாக்கத்தில் அணுமின் உலையில் வேலைப் பார்ப்பவர்களின் குழந்தைகள் உடல் ஊனமுற்றவர்களாகப் பிறக்கின்றனர். அதைச் சுற்றி வாழ்பவர்கள் பலர் புற்றுநோயாலும் தன்னெதிர்ப்புள்ள (self immune) தைராய்டு நோயினாலும் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பதையும் தாங்கள் டெகல்கா அறிக்கையில் ஏன் படிக்க வில்லை?
நான் 4 ஆண்டுகள் அங்கு பணி செய்தவன். கல்பாக்க அணுவியல் கூடத்தில் ஆயிரக் கண்ண்கான பேர் பணி செய்கிறார். கலபாக்கம் டவுனில் டாக்டர் புகழேந்தி உட்பட பல்லாயிரம் பேர் 40 ஆண்டுகள் வசித்து வருகிறார். அங்கு ஊன முற்றவர் அணுக்கதிர் அடியால் பாதிக்கப் பட்டவர் என்று விஞ்ஞான ரீதியாக இதுவரை நிரூபிக்கப் படவில்லை.
5. கல்பாக்கத்தில் இயல்பு அளவை விட 50 மடங்கு காமா கதிர்வேச்சு கூடுதல் என்பதை நீங்கள் எப்போது உணர்ந்து கொள்வீர்கள்? (டெகல்கா படியுங்கள்)
கல்பாக்க அணுவியல் துறைப் பரப்பு 20 சதுர மைலுக்கு மேற்பட்டது. எங்கே காமாக்கதிர் 50 மடங்கு என்று குறிப்பாகச் சொல்ல வேண்டும்.
6. தமிழ் நாட்டில் உள்ள காற்றாலைகள் இத்தகைய மின் தேவையுள்ள நிலையிலும் காற்று இருந்தும் ஓடாமல் இருப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? மின்னாற்றலை கையாளும் அளவிற்கு போதுமான அளவு துணை மின் நிலையங்கள் இல்லாது இருப்பது தான். அணு உலை வந்தால் மட்டும் என்னவாகும்?
அணுசக்தி சம்பதப்பட்ட தர்க்கம் இது. காற்றாலை பற்றி இங்கே தர்க்கமில்லை. அது வேறு தளம்.
அணுமின் உலைகள், அனல் மின்சார நிலையங்கள் போல் சிறந்த அடிநிலை மின்சார அனுப்பு (Base Load) நிலையங்கள்.
7. தமிழ் நாட்டில் போதுமான அளவு மின் உற்பத்தி இருந்தும் மின் வெட்டு இருப்பது. தயாரிக்கும் மின்சாரத்தை நடுவண் க்ரிட் இல் இணைக்கும் அளவிற்கு கூடுதல் ஆற்றலை நடுவண் க்ரிட் தாங்க வல்லது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? அங்ஙணம் தாங்கினால். மரபு சாரா மின்னாற்றலை கிடைக்கும் சமயத்தில் பயன்படுத்தி விட்டு அது இல்லாத சமயத்தில் மட்டும் பிற மின்னிலை யங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்று. மின்வெட்டிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்பது ஏன் உஙளுக்குப் புரிய வில்லை.
கூடங்குள 2200 மெகா வாட் அணுமின் சக்தியை அனுப்பும் தகுதி மின்வடச் சுற்றில் உள்ளது. அது NPCIL மத்திய அரசின் பொறுப்பு. சென்னை மின்சார வாரியத்தின் பிரச்சனை பற்றி இங்கே தர்க்கமில்லை.
8. டெகல்கா அறிக்கையை எடுத்து படியுங்கள் எத்தனை பேர் கல்பாக்கத்திலும் பிற அணு மின்னிலையங்களிலும் கதிர்வீச்சால் இறந்துள்ளார்கள் என்று. அவர்கள் குறிப்பிட்டுள்ள அதிகாரப் பூர்வமான ஆதாரத்தையும் பாருங்கள். அல்லது உங்களைப் போல் உள்ளவர்கள் நம்ப
கல்பாக்கம் உட்பட இந்தியாவின் 25 (20 அணுமின் நிலையங்கள் + 5 ஆய்வு அணு உலைகள்) அணுசக்தி நிலயத்தில் 5கடந்த 50 ஆண்டுகளாக கதிரடியில் காயப் பட்டு மரிக்கவில்லை. இறந்தனர் என்பதற்கு தக்க ஆதாரங்கள், நிரூபணம் தேவை.
9. நீங்கள் கூறிய ஆறாவது விரல் பலருக்கு தோன்றியுள்ளது. ராஜஸ்தான் யுரேனியச் சுரஙத்தைப் பற்றித் தேடிப் பாருங்கள். அனைத்து அணுமின் நிலையங்களைப் பற்றி டெகல்காவில் படியுங்கள். பூனை கண்மூடினால் உலகம் இருளாது அல்லவா? குதிரைக்கு கடிவாளம் இட்டால் பாதையின் பக்கவாட்டில் புல் இல்லாமல் போகுமோ! (மின்சாரம் நல்லது பயனுள்ளது என்பது எனக்கும் தெரியும் அதன் அழிவுகரம் கடிவாளம் நீக்கிப் பார்த்தால் தான் தெரியும்.
ராஜஸ்தானில் யுரேனியச் சுரங்கம் கிடையாது. ஆறாவது விரல் கதிரடியால் முளைக்குது என்பதற்குத் தக்க ஆதாரம், நிரூபணம் தேவை.
10. உஙளுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை என்பதால் யாருக்குமே ஏற்படாது என்பது தவறு. ஒருவேளை இந்தக் கதிர்வீச்சடியின் பாதிப்பு பத்து தலைமுறைக்குப் பின் தெரிந்தால் என்ன செய்வீர்கள். உஙள் ஜீன்-இன் ஆயிரக் கணக்கான மூலக்Kஊறுகளில் ஒன்றும் பதிக்கப் படவில்லை என்பதை எப்படி உறுதி செய்வீர்கள்?
அணு உலைகளில் வேலை செய்பவர் அத்தனை பேரின் அனுதினக் கதிர்வீச்சுப் பதிவுகள் பத்திரமாய் சேமிக்கப் பட்டுள்ளன.
11. வடக்கு வளர்கிறது தெற்கு தேகிறது என்று சொல்லிவிட்டு உங்கள் மகளை மேற்கு வளர அனுப்பி விட்டீர்கள் போலும்.
25 ஆண்டுகள் இந்திய அணு உலைகளில் வேலை செய்து நான் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன். மகள் எந்த நாட்டு அணு உலையில் வேலை செய்தால் என்ன ?
12. முறையுடன் பழக்கினால் யானையின் மூர்க்க குணத்தை கட்டுப்படுத்த தான் முடியும். யானை ஒருபோதும் மதம் பிடிக்காது என்று உறுதி கூற முடியுமா? ஒரு வேலை மதம் பிடித்தால் என்னவாகும். அனைவரையும் கொன்று போடும் அணு உலைக்கு மதம் பிடித்தால் தலைமுறை தலைமுறைகள் பதிக்கப்படுமே.
அணு உலைகள் மதம் பிடிக்கா. மனிதத் தவறு, யந்திரப் பழுது, இயற்கைச் சீற்றம் இம்மூன்றில் ஒன்றால் அல்லது இரண்டால் அபாய நேரலாம். ஆனால் அவ்விதம் விபத்து தூண்டப்பட்டால் முதலில் அணு உலை இயக்கம் தானாய் நிறுத்தமாகும். அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் சூட்டைக் குறைக்கும். செர்நோபில், புகுஷிமா மாடல் அல்ல இந்தியாவின் கூடங்குளம், கனநீர் அணுமின் உலைகள்.
13. அணு மின்னிலையத்தால் உங்களைப் போலுள்ள 0.01 விழுக்காடு மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக 99.99 விழுக்காடு மக்களை அழிவு வாய்க்கு இழுத்துச் செல்வது ஏன்?
மோட்டார் வாகனத் தொழிற்சாலகள் நாட்டில் பெருகியுள்ளன. அவற்றுக்கு உபரிச் சாதானங்கள் (ஸ்பார்பார்ட்ஸ்) தயாரிக்க பல்வேறு சிறு தொழிற்சாலைகள் பல்லாயிரம் பேருக்கு வேலை தருகின்றன.
இந்தியாவில் 25 அணு உலைகட்கு வேண்டிய 10,000 சாதனங்கள் 100 மேற்பட்ட தொழிற்சாலைகள் செய்து ஆயிரக் கணக்கான பேருக்கு வேலை தருகின்றன.
பாரத அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா
இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்
ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்
14. இதுவரை விபத்து நடந்த எல்ல இடத்திலும் அதை கட்டிய பொறியியல் ஆளர்கள். விபத்து நடக்காது என்று உறுதி அளிக்க வில்லையா? பின் ஏன் விபத்துகள் நடந்தன அதுபோல் கூடங்குளத்தில் நடவாது என்று நீங்கள் எப்படிக் கூற முடியும் தாங்கள் கடவுளா என்ன?
பதில் 12 வினாவில் உள்ளது.
15. நடுவண் க்ரிட்டை அரசு மறுசீரமைக்கப் பரிசீலிக்காதது ஏன்?
கேள்வி முழுமையாய் இல்லை. பிரச்சனை என்ன ?
16. நாளொன்றிற்கு 100,000 டாலர் இழப்பு என்றீர்கள் அது எப்படி என்று விளக்க முடியுமா?
இது 800 மெகா வாட் கனடா கனநீர் அணுமின் நிலைய இழப்பு. இந்தியாவில் 22 இல் 18 அணுமின் உலைகள் கனநீர் மாடல். கூடங்குளம் 1100 மெகா வாட் இரட்டை நிலையம். அதனால் நான் குறைந்தது 100,000 என்று இரட்டை நிலையத்துக்குக் குறிப்பிட்டேன்.
17. தமிழகம் இந்த மின்சாரத்தை அண்டை மானிலத்திற்கு விற்கதான் போகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? இதன்மூலம் வடக்கை மேலும் வளர வைக்க வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கா?
கூடங்குளம் மத்திய அரசின் அமைப்பு. தமிழர் உட்பட இந்தியர் அனைவரது வரிப்பணமும் உள்ளது
18. சரி உங்கள் கூற்றை சற்று மாற்றி 100,000 டாலர் வருவாய் இழப்பு என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நாளொன்றிற்கு வருவாய் அணுமின் நிலையம் மூலம் கிடப்பது 50 லட்சம் ரூபாய். அப்படியானால் ஆண்டிற்கு 182.5 கோடி (இது மீன் மூலம் கிடைக்கும் வருவாயை விட பத்து மடங்கிற்கு மேல் குறைவு). இதில் முதலீடு 13000 கோடி. முதலீடைப் திரும்பப் பெற ஆகும் காலம் 71 ஆண்டுகள். 1 விழுக்காடு வட்டிக்கு வங்கியில் இட்டு வைத்தால் கூட இதை விட ஆதாயம் அதிகம் கிட்டுமே?
மீன் வாணிபம் கூடங்குள மின்சார வாணிபத்தை விட அதிகமாய் இருக்கலாம். ஆனால் மின்சாரம் அனுப்பித் தமிழ்நாட்டுத் தொழிற்சாலகளை மீன் வாணிபம் இயக்க முடியுமா?
19. உங்கள் புள்ளீ விபரத்திற்கு வருவோம். இரு சக்கர ஊர்தியில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு 4000 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று உள்ளது. ஒருவேளை 4000 பேர் ஓட்டுவதாகக் கொண்டால் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை. சற்று மதி நுட்பத்தோடு சிந்திதாலே நான் சொல்லுவது சரி என்பது புலப்படும்.
நான் சொல்லுவது சரியாக இல்லை என்றால் ஒரு இந்த ஆண்டில் ஒரு விபத்துக்கு மேல் ஏற்பட்க் கூடாது. இந்தக் கணக்கில் பார்த்தால் உலகம் முழுவதும் 10,00,000 அணுமின் பணியாளர்கள் உள்ளதாகக் கொள்வோம். எனில் 10 ஆண்டிற்கு ஒரு முறை விபத்து நிகளும். அங்ஙனம் நிகழ்ந்தால் என்னவாகும்.
இருசக்கர ஊர்தி போன்று அவர் மட்டும் மடியா மாட்டார். பலர் மடிவர். அவர்களது சந்ததிகளும் சேர்ந்து அல்லவா மடியும். பிற விபத்துகளை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும். நீங்கள் சொல்லுவது போல் 100,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் விபத்து நிகழும் என்றே கொள்வோம். அது ஏன் நாளையாக இருக்காது எஙிறீர்கள்?
21 ஆண்டு யந்திர யுகத்தில் 20,000 ஜெட் விமானங்கள் தினம் பறக்கின்றன. மில்லியன் கணக்கில் இரயில் வண்டிகள் ஓடுகின்றன. பில்லியன் கணக்கில் கார் வாகனங்கள் ஓடுகின்றன. 900 மேற்பட்ட அணு உலைகள் (அணுமின்சக்தி, ஆய்வு அணு உலை, நியூகிளியர் சப்மெரின், ராக்கெட்டுகள்) சாதனங்கள் பழுதாகும், மனித தவறுகள் உண்டாகும். இயற்கையின் சீற்றம் எழும்பும். ஆதலால் சிலவற்றில் விபத்துக்கள் நிகழும் எப்போதாவது. பாதுகாப்புக்கு மத்திய அரசாங்கம், மாநில அரசு, ஊராட்சிக் குழு, காவல் துறை, பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை.
நாம் செய்ய வேண்டிய தென்ன ?
- மனிதத் தவறுகளைக் குறைக்க அணு உலைகளில் நெருங்கிய கண்காணிப்பு, பயிற்சி அவசியம்
- சாதனப் பழுதுகளைக் குறைக்க உயர்தர சாதன உற்பத்தி, சோதனை தேவை. ஒழுங்கான காலப் பராமறிப்பு, செம்மைப் படுத்தல்
- இயற்கையின் தீங்கை எதிர்கொள்ள மக்கள் அபாய ஒத்துழைப்பு அணி, அரசாங்கப் பொறுப்பு. காவல் துறை உதவி.
20. அழிவு வாய் (அபாயம்) பற்றியது அல்ல மக்களின் அச்சம் அதன் விளைவைப் பற்றியதே.
அணுமின்சக்தி தேவையான் தீங்கு என்று தெரிந்தே கடந்த 50 ஆண்டுகளாய் 30 மேற்பட்ட உலக நாடுகள் 440 மேற்பட்ட (+ 500 அணு ஆய்வு உலைகள்) எணுமின் உலைகளைக் கவனமுடன் இயக்கி வருகின்றன.
இன்னும் 30 -50 ஆண்டுகளுக்கு அணுமின் உலைகள் உலகில் இயங்கத்தான் போகின்றன. அச்சமுடன் வாழ்வோர் அணுமின் உலைகளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
Comments