Dr. S. Jayabarathan, B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada Retired nuclear engineer Dr. S. Jayabarathan (B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada, born February 21, 1934) kindly replied for the Anti-Koodankulam critic by John Rupert , which I noted as best critic. Since the formatting in comments section is not good for reading, I have formatted them into a new post. I’ll write about the real questions and real concerns in few days time. 1. மீன்பிடித் தொழிலால் கூடங்குளம் பகுதியில் இருந்து ஆண்டொன்றிற்கு அரசுக்கு 2000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதை எல்லம் அணுவுலை அமைந்தால் எந்தா நாட்டிற்கும் நம்மால் மீன் ஏற்றுமதி செய்ய இயலாது. இந்த இழப்பு உங்கள் கண்ணிற்கு தெரியாதது ஏனோ? கல்பாக்கத்தில் பணி புரியும் பொறியியல் வல்லுனர்கள் அங்கு கிடைக்கும் மீன்களை வாங்குவதில்லை என்பது உஙளுக்குத் தெரியும் என எண்ணுகிறேன். ஜப்பான் தேசத்தில் இயங்கும் 54 அணுமின் உலைகள் கடற்கரையில்தான் அமைந்துள்ளன. கனடாவில் 20 அணுமின் உலைகள் சுவைநீர் ஏரிகளில் உள்ளன. உலகில் பல நாடுகளில் அணு உலைகள் நதிக் கரையில் கட்ட...